;
Athirady Tamil News

சோழர் கால சிவன் கோயிலை பாதுகாக்குமாறு கோரிக்கை..!!

0

பூநகரி, மண்ணித்தலையில் அழிவடைந்து காணப்படும் சோழர் காலத்தையுடைய சிவன் கோயிலைப் பாதுகாத்து பேணுமாறு அப் பகுதியில் வாழும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மண்ணித்தலை சிவன் கோவில் தொன்மையாக வரலாற்றுச் எச்சமாக காணப்படுகிறது. ஆனால் தற்போது அழிவடைந்து செல்லும் நிலையில் உள்ளது. பிரதேச பொது மக்களாகிய நாம் இதனை பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட முடியாது. அவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபட்ட போதும் தொல்லியல் திணைக்களத்தினால் தடுத்து நிறுத்தப்படுவதாக அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கோவில் இருக்கும் பகுதியில் ஏதேனும் பணிகளில் ஈடுபடுவது சட்டவிரோதம் எனத் தெரிவிக்கப்பட்டதோடு அவ்வாறு ஈடுபட் டால் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவீர்கள் என்று தாம் எச்சரிக்கப்பட் டதாகவும் அம்மக்கள் குறிப்பிடுகின்றனர். இதனால் பொது மக்களால் எவ்வித பணிகளையும் மேற்கொள்ள முடியாது. அதேவேளை தொல் லியல் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களும் இதனை பாதுகாக்கும் முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் புஸ்பரட்ணம் தனது குறிப்பில், 1993 ஆம் ஆண்டு என்னால் இச்சிவாலயம் முதன் முதலாக அடையாளம் காணப்பட்டது. ஆனாலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இப்பிரதேசத்தில் மேலும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்பட்ட கால தாமதமும் யுத்தத்தின் பாதிப்புகளும் இச்சிவாலயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது இச்சிவாலயம் வெடிப்புகளும் இடிபாடுகளும் நிறைந்து தோன்றுவதுடன் முகப் புத் தோற்றம் இடிவடைந்த நிலையிலே காணப்படுகின்றது.

இவ் வாலயம் கிட்டத்தட்ட 24 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்டது. ஆனாலும் இப்போது 3 அடி நீளமான சுவர்ப் பகுதி மாத்திரமே எஞ்சியுள்ளது. இக்கோவில் கட்டடமானது கடலில் இருந்து எடுக் கப்பட்ட கோறைக் கற்களையும் செங்கட்டிகளையும் சுதை சுண் ணாம்பு போன்றவற்றையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள் ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் இக்கோவில் மிகப் பழைமை யான கோவில் என்னும் முடிவுக்கு வரமுடியும்.

இவ்வாலயம் முழுமையான திராவிட கலை மரபைக் கொண்டு விளங்குவதுடன் அத்திராவிடக் கலையை பிரதிபலிக்கின்ற மிகப் பழைமையான கோவில் இது என்பதில் அறிஞர்கள் மத்தியில் எவ்வித முரண்பாடுகளும் காணப்படவில்லை. ஆனால் கோவில் உருவாக்கப்பட்ட ஆண்டு தொடர்பாக அறிஞர்கள் பலரும் பல் வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்தாலும் அவர்கள் அனைவரும் திராவிட கலை மரபைப் பிரதிபலிக்கின்ற கோவில் இது என்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை.

இக்கோவில் கட்ட டத்தில் உள்ள தூண் கிட்டத்தட்ட ஏழு அடி நீளம் கொண்டது. அங்குள்ள சுவர் ஆரம்ப கால சோழர் கலை மரபை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மேலும் இக்கோவில் மாடமானது ஆரம்ப கால பல் லவ, சோழ, பாண்டிய காலத்தை பிரதிபலிக்கின்றன. மிக முக்கிய அம்சமாக மூன்று அடுக்குகளைக் கொண்ட வகையில் இக்கோவில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. அது ஆரம்ப கால பல்லவ, சோழ காலத்தைப் பிரதிபலிக்கின்றது. விமானத்தின் மூன்று தளங் களும் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருப்பதுடன் மேலே தூபி வைக்கும் பகுதியானது வட்ட வடிவமாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஏறத்தாழ 14 அடி நீளம் கொண்ட விமான மாக இது கருதப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சிவன் கோவில் ஒன்று எம் கண்முன்னே அழிவ டைந்து செல்லும் நிலையில் இருப்பதனை எவரும் கண்டு கொள்ளவில்லை. தமிழ் மக்களின் வரலாறு தொடர்பில் அதிகம் பேசுகின்ற அரசியல் தரப்பினர்கள் கூட தமிழர்களின் வரலாற்று தொன்மை ஒன்று அழிவடைந்து செல்வதனை கண்டுகொள்ளா மையும் மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே இந்த வரலாற்று தொன்மையான மண்ணித்தலை சிவன் கோவிலை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 13 =

*