;
Athirady Tamil News

ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பாக புதிய தீர்மானம் நிறைவேற்றம்..!!

0

சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரனை வெசாக் தினத்திலாவது விடுதலை செய்யுமாறு கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசசபையின் முதலாவது அமர்வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபைக்குத் தெரிவாகிய உறுப்பினர்களின் முதலாவது அமர்வு இன்று (திங்கட்கிழமை) கரைச்சிப்பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைக் கைதியான ஆனந்தசுதாகனை விடுதலை செய்யவேண்டுமென பிரதேசசபை உறுப்பினர்களான ஐயம்பிள்ளை அசோக்குமார், விக்ரர் சாந்தி ஆகியோர் தீர்மானத்தைக்கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபைக்கான பொதுநூலக காணி விடுவிக்கப்பட்டு நவீன வசதிகள் கொண்ட பொதுநூலகம் அமைக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை ஏற்கனவே ஒருங்கிணைவுக்குழுவின் தீர்மானங்களுக்கு அமைவாக கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் கீழ் வருகின்ற மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேசசபை பொறுப்பேற்று நிர்வகிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், அது நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் பிரதேச சபையின் ஊடாக இதனை நடைப்படுத்தவேண்டும், தமிழ்பிரதேசங்களில் தமிழ் மொழி முதல்மொழியாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டும். மற்றும் கரைச்சிப்பிரதேச சபையின் உப அலுவலமாகக் காணப்படுகின்ற கண்டாவளை தனிப்பிரதேச சபையாக உருவாக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*