;
Athirady Tamil News

கரைச்சி பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது..!! (படங்கள்)

0

இன்று காலை கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் உப தவிசாளர் உறுப்பினர்கள் பிரதேச சபை உத்தியோகத்தர்களால் வரவேற்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர் இவ் வரவேற்பு நிகழ்வில் தமது கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு அழைப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி சுயேட்சைக் குழுவின் உறுப்பினர்கள் பங்குகொள்ளவில்லை அதன்பின்னரான அமர்விலையே கலந்துகொண்டனர்

மதிப்பளிக்கப்பட்டதனை தொடர்ந்து கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குத் தெரிவாகிய உறுப்பினர்களின் முதலாவது அமர்வு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, ஆனந்தசுதாகரை விடுதலை செய்யவேண்டுமென பிரதேசசபை உறுப்பினர்களான ஐயம்பிள்ளை அசோக்குமார், விக்ரர் சாந்தி ஆகியோர் தீர்மானத்தைக்கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கரைச்சி பிரதேச சபைக்கான பொதுநூலக காணி விடுவிக்கப்பட்டு நவீன வசதிகள் கொண்ட பொதுநூலகம் அமைக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, ஏற்கனவே ஒருங்கிணைவுக்குழுவின் தீர்மானங்களுக்கு அமைவாக கரைச்சி பிரதேச சபையின் கீழ் வருகின்ற மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேசசபை பொறுப்பேற்று நிர்வகிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், பிரதேச சபையின் ஊடாக இதனை நடைமுறைப்படுத்தவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தோடு, தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழி முதல்மொழியாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், கரைச்சி பிரதேச சபையின் உப அலுவலமாகக் காணப்படுகின்ற கண்டாவளை, தனிப் பிரதேச சபையாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 11 =

*