மீன்பிடிக்க சென்ற இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் உயிரிழப்பு..!!

மட்டக்களப்பு, தாளங்குடா பகுதியில் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் களப்பில் மீன்பிடிக்கச் சென்று சுழியில் புதைந்து உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஏ.சி. முகமட் றியாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தாளங்குடா இராணுவ முகாமின் பின்பகுதியில் அமைந்துள்ள களப்பில் மீன்பிடியில் ஈடுபட்டபோது, சுரியில் புதைந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.