;
Athirady Tamil News

விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

0

புத்தளம்- கந்ததொடுவாய் பகுதியில் பக்கத்து வீட்டு சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயதுடைய சிறுவன் ஒருவர், கொங்கிரீட் தரையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று முன் தினம் (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், உயிரிழந்தவர் 7 வயதுடைய சசிந்து ஆலோக என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மற்றொரு சிறுவனுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும், இதன்போது குறித்த சிறுவன் அவ்வீட்டில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த சுமார் மூன்று அடியளவு உயரமுள்ள இடத்தில் இருந்த கொங்கிரீட்டில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென தவறி கீழே வீழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் உடனடியாக சிறுவன் முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போதும், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*