;
Athirady Tamil News

யானை வழித்தட பாதுகாப்பு குறித்து தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!

0

யானைகள் வழித்தடம் தொடர்பான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆத்மாராம் நத்கர்னி, ‘யானை வழித்தட பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை 22 மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதற்கு கேரளா, மேகாலயா, மேற்கு வங்காளம் ஆகிய 3 மாநில அரசுகள் மட்டுமே பதில் சமர்ப்பித்து உள்ளன. மற்ற மாநிலங்கள் இதுவரை பதில் சமர்ப்பிக்கவில்லை’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஏன் பதில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை? என்று கேட்டார். அதற்கு தமிழக அரசு வக்கீல் யோகேஷ்கண்ணா, ‘இதுதொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு இருக்கிறோம்’ என்றார்.

அதனைத்தொடர்ந்து நீதிபதிகள், தமிழகம் உள்பட ஏனைய மாநிலங்கள் யானை வழித்தடம் தொடர்பான அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனர். #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 5 =

*