;
Athirady Tamil News

அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு..!!

0

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள என்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஜூலை முதல் வாரத்துக்குள் அணு உலை பாதுகாப்பு முகமை ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகள் சரியாக கையாளாமல், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாமல் இருப்பதாக கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தர்ராஜன், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் அந்த மனுவில், அணுக்கழிவுகளை பாதுகாப்பாக அகற்றாமல் கடலில் கொட்டப்படுவதால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். எனவே உரிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படும் வரை அங்கு மின் உற்பத்திக்கு தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக வக்கீல் பிரசாந்த் பூஷணும், மத்திய அரசின் சார்பில் வக்கீல் துசார் மேத்தாவும் ஆஜராகினர்.

மனுதாரர் தரப்பில், அணுக்கழிவுகளை சரியாக கையாளாததால் தான் ஜப்பான் அணு உலையில் விபத்து ஏற்பட்டது. அதே போல் தான் கூடங்குளத்திலும் அணுக்கழிவுகள் அலட்சியமாக கையாளப்படுவதாக வாதிடப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு வக்கீல், சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள என்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஜூலை முதல் வாரத்துக்குள் அணு உலை பாதுகாப்பு முகமை ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததுடன், ஜூலை மாதத்துக்கு வழக்கை ஒத்திவைத்தனர். #Tamilnews #Kudankulam #NuclearPlant

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*