;
Athirady Tamil News

மர்மமான முறையில் மரணமான பெண்ணின் சடலம் மீட்பு..!!

0

வீடொன்றின் பின்புறமாக பற்றை மறைவிற்குள் மர்மமான முறையில் மரணமான பெண்ணொருவரின் சடலமொன்றினை எல்ல பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

எல்ல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பள்ளக்கட்டுவ நகரின் புறநகர்ப் பகுதி வீடொன்றின் பின்புறமுள்ள பற்றை மறைவிற்குள்ளிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் பள்ளக்கட்டுவையைச் சேர்ந்த 45 வயதான எஸ்.எச்.அனுலாவதியாவார்.

குறித்த பெண்ணின் மரணம் மர்மமாக இருப்பதாக தெரிவித்த எல்ல பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + 16 =

*