;
Athirady Tamil News

சம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை குறித்து விரைவில் தீர்மானம்..!!

0

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக கொண்டு வரவுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் கூட்டு எதிரணியினர் கட்சி ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை. கட்சியின் உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களுக்கும் , கட்சியின் கருத்துகளுக்கிடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

13வது அரசியலமைப்பு நடைமுறையில் இருக்கும் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்வது எவ்விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தாது. என்பது எனது தனிப்பட்ட கருத்தாக காணப்படுகின்றது.

கூட்டு எதிரணியினர் மக்கள் விடுதலை முன்னணியின் யோசனைக்கு ஆதவராக செயற்பட்டால் தேசிய சுதந்திர முன்னணி கூட்டு எதிரணிக்கு எதிராக செயற்படுவதாக அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளமை பொருத்தமற்றதாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − 1 =

*