;
Athirady Tamil News

6 பேர் பயணிக்கக் கூடிய ஓட்டோ- பாவனைக்கு வருகிறது..!!

0

இலங்கையில் 6 பேர் பயணிக்க கூடிய முச்சக்கரவண்டி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட 4 பேர் மாத்திரமே பயணிக்க முடியும். இந்த நிலையில் 6 பேர் பயணிக்கக் கூடிய புதிய முச்சக்கர வண்டி ஒன்று சந்தையில்
அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த முச்சக்கர வண்டியில் சாரதி மற்றும் 5 பேர் பயணிக்க முடியும். அதற்கமைய மேலும் 3 பேர் பயணிக்க கூடிய வகையில் இந்த புதிய முச்சக்கர வண்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்துக்கு அமைய 3 பயணிகள் மாத்திரமே ஒரு முச்சக்கர வண்டியில் பயணிக்க முடியும். எனினும் இந்த புதிய தயாரிப்பு மூலம் அதிக வசதிகள் மற்றும் இலகுவாகப் பயணம் மேற்கொள்ள
முடியும் எனத் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறான முச்சக்கரவண்டிகள் ஆசிய நாடுகளில் மாத்திரம் பயன்பாட்டில் உள்ளன. விரைவில் இலங்கையிலும் அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 4 =

*