;
Athirady Tamil News

ஊழல் வழக்கில் இந்தோனேசியா முன்னாள் சபாநாயகருக்கு 15 ஆண்டுகள் சிறை..!!

0

தென்கிழக்கு ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள இந்தோனேசியா நாட்டில் சுமார் 26 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள ‘ஆதார்’ அட்டை திட்டத்தைப்போல் அந்நாட்டு மக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க அரசு முடிவு செய்தது.

இதுதொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் செய்து நாட்டுக்கு 17 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக ஆளும் கோல்கார் கட்சி தலைவரும் இந்தோனேசிய பாராளுமன்ற பாநாயகருமான சேட்யா நோவான்ட்டோ மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, 11-12-2017 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிரான ஊழல் வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சேட்யா நோவான்ட்டோ-வுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். தண்டனை காலம் முடிந்து ஐந்தாண்டுகளுக்கு (இன்றிலிருந்து 20 ஆண்டுகளுக்கு) அவர் பொது பதவிகளை வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. #Indonesiaparliament# formerspeaker #15yearsjail

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*