;
Athirady Tamil News

நாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு..!!

0

நாடாளுமன்றத்தைப் புனர்நிர்மாணம் செய்ய 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

30 வருடம் பழைமையான நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல புனர்நிர்மாண நடவடிக்கைகள் இனங்காணப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த புனர்நிர்மாணப் பணிகளுக்காக 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் ஊடகங்கள் வாயிலாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை எனவும், இவ்வாண்டு புனர்நிர்மாணப் பணிகளுக்காக 200 மில்லியன் ரூபாய்களே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + ten =

*