;
Athirady Tamil News

அகதிகளுக்கு உதவியதற்காக பிரான்சில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ் ஆர்வலர்கள் ..!!

0

அகதிகள் அடங்கிய குழுவை சட்டவிரோதமான முறையில் தேசிய எல்லையை கடக்க உதவியதற்காக பிரான்ஸ் பொலிஸார் நான்கு இத்தாலியர்கள் மற்றும் 2 சுவிஸ் ஆர்வலர்களைக் கைது செய்துள்ளனர்.

இத்தாலியில் இருந்து ஆல்ப்ஸ் மலை வழியாக சில அகதிகள் புலம்பெயர அவர்கள் உதவி செய்த நிலையில் திங்களன்று சம்பந்தப்பட்ட ஆர்வலர்களை காவலில் வைத்துள்ளதாக அல்பைன் நகரில் உள்ள காபூலின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

பிரான்ஸ் அரசு சர்ச்சைக்குரிய குடியேற்ற மசோதாவை நிறைவேற்றிய சில மணிநேரத்திற்கு முன்பாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Montgenevre Pass வழியாக ஞாயிறன்று 30 பேர் கொண்ட அகதிகள் பிரான்ஸ் எல்லையைக் கடக்க 100க்கும் மேற்பட்ட பிரெஞ்சு மற்றும் இத்தாலிய ஆர்வலர்கள் உதவியிருப்பதாகவும் அதன் மூலம் அவர்கள் எல்லைகளை கடந்து விட்டதாகவும் தெரிகிறது.

ஐரோப்பாவின் பாதைகள் முழுவதும் மூடப்பட்ட நிலையில் பான்-ஐரோப்பிய இயக்கத் தலைமையின் வலதுசாரி தீவிர எதிர்ப்பாளர்கள் எக்கேல் பாஸ் அருகே போராட்டம் நடத்தியதால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது

பாதைகள் மூடப்பட்டுள்ளன ஐரோப்பா உங்கள் நாடாக முடியாது உங்கள் வீட்டிற்கு திரும்பி செல்லுங்கள் போன்ற கோஷங்களை எழுப்பியபடி போராட்டக்காரர்கள் போராடிய சமயத்தில்தான் இந்த அகதிகள் அத்துமீறல் நடந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் உள்துறை மந்திரி Gerard Collomb, தீவிர இடது மற்றும் வலதுசாரி” குழுக்கள் தான் இந்த ஏற்றுக் கொள்ள முடியாத சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

பிரான்சில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவருக்கு அந்நாட்டு சட்டம் அதிக உதவி அளித்து வருகிறது, அதே சமயம் பொருளாதார அகதிகள் என்று முத்திரை குத்தி அவர்களை நிராகரிப்பதும் வெளியேற்றுவதும் சுலபமாக நடந்தேறுகிறது.

சமீபத்திய மசோதாப்படி அகதிகள் விண்ணப்பம் ஏற்க 90 நாட்கள் மற்றும் அவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மேல் முறையீடு செய்ய இரண்டு வாரம் போன்ற காலக் கெடுவை வலது சாரிகள் தீவிரமாக எதிர்த்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 20 =

*