;
Athirady Tamil News

மன அழுத்தத்தால் விடுப்பு எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: சுவிஸ் ஆய்வில் தகவல்..!!

0

கடந்த ஐந்து ஆண்டுகளில் மன அழுத்தத்தால் விடுப்பு எடுப்பவர்களின் எண்ணிக்கை 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சுவிஸ் மருத்துவ காப்பீட்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவ விடுப்பு எடுக்கும் சுவிஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை 29 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதுவும் மன நல பிரச்சினைகளுக்காக எடுக்கப்படும் விடுப்பு நாட்கள் மிக அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல பணியாளர்களுக்கு வேலை பளுவைத் தாங்கும் திறன் இல்லை என்று கூறியுள்ள சுவிஸ் வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த ஆட்ரியன், மாற்றத்தக்க வேலை நேரங்களும் ஊதியமற்ற ஓவர் டைம் வேலையும் நிலைமையை இன்னும் மோசமாக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் சுவிஸ் பணியாளர்கள் கூட்டமைப்போ குடும்பப் பிரச்சினைகள், போதைப்பொருள் பழக்கங்கள், சமூக ஊடகங்களின் தாக்கம் ஆகியவையே பிரச்சினைகளின் பின்னணியில் இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்நிலையில் மன நல மருத்துவரான Niklas Baer கூறும்போது மருத்துவர்கள் வெகுஎளிதாக மருத்துவ விடுப்பு அளித்து விடுவதாகக் கூறியுள்ளார்.

வேலை மன அழுத்தத்தை கொடுக்கலாம், ஆனால் அதற்கான சிறந்த சிகிச்சையும் வேலைதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் மன நல பிரச்சினைகளால் ஆண்டொன்றிற்கு 20 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் இழப்பு ஏற்படுகிறது.

இதற்கிடையில் வேலையிலிருந்து அனுப்பப்படும் பலர் அதிலிருந்து தப்புவதற்காக மருத்துவச் சான்றிதழ்களைப் போலியாகப் பெறுவதாக ஒரு குற்றச்சாடு பரவலாக உலவுவது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 17 =

*