;
Athirady Tamil News

போர்ச்சுக்கலில் மக்களாட்சி ஏற்பட்ட நாள்: ஏப்.25- 1974..!!

0

போர்ச்சுக்கலில் 40 ஆண்டுகளுக்கு மேலான பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்ட நாள்.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1829 – மேற்கு ஆஸ்திரேலியாவில் சார்ல்ஸ் ஃபிரெமாண்டில் சலேஞ்சர் என்ற கப்பலில் வந்து தரையிறங்கி சுவான் ஆற்று குடியேற்றத்தை ஆரம்பித்தார். * 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வாஷிங்டன், டிசியை அடைந்தனர். * 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் டேவிட் பராகுட் தலைமையில் லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரை கூட்டமைப்பினரிடம் இருந்து கைப்பற்றினர். * 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினர் பெரும் வெற்றி பெற்றனர். * 1898 – ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயின் மீது போரை அறிவித்தது. * 1915 – முதலாம் உலகப் போர்: ஆஸ்திரேலியா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் பிரெஞ்சுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியை முற்றுகையிட்டனர்.

* 1916 – அயர்லாந்தில் ராணுவச் சட்டத்தை ஐக்கிய இராச்சியம் பிறப்பித்தது. * 1916 அன்சாக் நாள் முதற் தடவையாக நினைவு கூரப்பட்டது. * 1945 – நாசி ஆக்கிரமிப்பு ராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது. * 1961 – ரொபர்ட் நொய்ஸ் ஒருங்கிணைந்த மின்சுற்றுக்கான (integrated circuit) காப்புரிமத்தைப் பெற்றார். * 1966 – தாஷ்கெண்ட் நகரத்தின் பெரும் பகுதி நிலநடுக்கத்தால் அழிந்தது. 300,000 பேர் வீடுகளை இழந்தனர்.

* 1974 – போர்ச்சுக்கலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது. * 1982 – காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலியப் படைகள் முழுவதுமாக சினாய் தீபகற்பத்தில் இருந்து வெளியேறியது. * 1983 – பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கிரகத்தின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது. * 1983 – ஹிட்லரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் “ஹிட்லரின் நாட்குறிப்புகள்” நூலின் முதல் பகுதியை ஜெர்மனியின் “ஸ்டேர்ன்” இதழ் வெளியிட்டது. * 1986 – சுவிட்சர்லாந்தின் மன்னனாக மூன்றாம் முசுவாட்டி முடிசூடினார். * 1988 – இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு இஸ்ரேல் மரண தண்டனை விதித்தது.

* 2005 – இத்தாலிய ஆக்கிரமிப்பாளர்களால் 1937-ல் களவாடப்பட்ட 1700-ஆண்டுகள் பழமையான சதுர நினைவுத்தூபியின் கடைசித் துண்டு எதியோப்பியாவுக்கு கொண்டுவரப்பட்டது. * 2005 – ஜப்பானில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 107 பேர் கொல்லப்பட்டனர். * 2006 – கொழும்பில் ராணுவத் தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்து 5 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 16 =

*