;
Athirady Tamil News

வடக்­கில் நிய­மிக்­கப்­பட்ட சிங்­க­ளச் சிற்­றூ­ழி­யர்­கள் மீள அழைக்­கப்­ப­டு­வ­ராம்..!!

0

வடக்கு மாகா­ணத்­துக்கு நிய­மிக்­கப்­பட்ட சமுர்த்­தித் திணைக்­க­ளத்­தின் சிங்­க­ளச் சிற்­றூ­ழி­யர்­கள் மீள அழைக்­கப்­ப­டு­வார்­கள் என்று உறு­தி­மொழி வழங்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்­தார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந் திரன்.

வடக்கு – கிழக்­கில் சிங்­கள சிற்­றூ­ழி­யர்­கள் நிய­மிக்­கப்­ப­டக் கூடாது என்­பது உள்­ளிட்ட 10 நிபந்­த­னை­களை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தலைமை அமைச்­ச­ரி­டம் முன்­வைத்­தி­ருந்­தது. அந்­தக் கோரிக்­கை­களை ஏற்­றுக் கொள்­வ­தாக தலைமை அமைச்­சர் கூட்­ட­மைப்­புக்கு எழுத்­து­மூ­லம் கடி­தம் வழங்­கி­யி­ருந்­தார்.

இதற்கு அமை­வாக, தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை கூட்­ட­மைப்பு எதிர்த்­தி­ருந்­தது. வாக்­கு­றுதி வழங்கி 20 நாள்­க­ளுக்­குள்­ளேயே, சமுர்த்தி திணைக்­க­ளத்­தால் யாழ்ப்­பா­ணத்­தில் சிற்­றூ­ழி­யர்­க­ளாக சிங்­க­ள­வர்­கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­னர். இந்த விட­யம் தொடர்­பில் கேட்­ட­போதே அவர் இவ்­வாறு கூறி­னார். அவர் தெரி­வித்­த­தா­வது-,

இந்த விட­யம் தொடர்­பாக சமூ­க­வ­லு­வூட்­டல் அமைச்­சர் மலிக் சம­ர­விக்­கி­ர­ம­வின் கவ­னத்­துக்கு கொண்டு சென்­றேன். இது தொடர்­பில் ஆராய்ந்து அமைச்­சர் எனக்­குப் பதி­ல­ளித்­தார்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மான விட­யத்தை தொடர்ந்து, சமூக வலு­வூட்­டல் அமைச்­ச­ராக இருந்த எஸ்.பி.திசா­நா­யக்க பதவி வில­கி­யி­ருந்­தார். அவர் பதவி வில­கிச் செல்­வ­தற்கு சில தினங்­க­ளுக்கு முன்­னர் 300 பேருக்கு நிய­ம­னம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இவர்­க­ளில் 190 பேர், முன்­னாள் அமைச்­சர் எஸ்.பி.திசா­நா­யக்­கா­வின் தொகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள். இந்த நிய­ம­னங்­கள் தொடர்­பாக ஆரா­யப்­ப­டும் அதே­வேளை, வடக்கு மாகா­ணத்­திற்கு அனுப்­பப்­பட்ட சிங்­கள சிற்­றூ­ழி­யர்­களை மீள அழைக்­கு­மாறு அமைச்­சர், செய­ல­ருக்கு உத்­த­ர­விட்­டுள்­ளார் என்று என்­னி­டம் தெரி­வித்­தார் – என்­றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*