;
Athirady Tamil News

புராதன ஆலயம் சிதைந்த நிலையில் கண்டுபிடிப்பு..!! (படங்கள்)

0

அம்பாறையில் 12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர்காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கருகில் இந்த ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தைப் பார்வையிட மக்கள் முண்டியடிப்பதைக் காணக்கூடியதாயுள்ளது. சிதைந்த ஆலயத்தையும், அருகிலுள்ள தீர்த்தக்குளத்தையும் பாம்புகள் வாழும் புற்றினையும் அவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

14 அங்குல செங்கற்களாலான இவ்வாலய சிதைவுகளுடன் சுற்றவரவுள்ள கட்டடத்தின் ஒருசில பகுதிகள் காணப்படுகின்றன.

காடுமண்டி மரம் புற்களுக்கு மத்தியில் செடி கொடிகளுக்கிடையில் மறைந்து இவ்வளவுகாலமும் இப்புராதன ஆலயம் மறைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + twelve =

*