;
Athirady Tamil News

பௌத்த சமய வழிபாடுகளுடன் வவுனியா நகரசபை உறுப்பினர்களின் வரவேற்பு நிகழ்வு..!! (படங்கள்)

0

வவுனியா நகரசபை உறுப்பினர்களின் வரவேற்பு நிகழ்வு பௌத்த சமய வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் தவிசாளர் இ.கௌதமன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட உபதவிசாளர் உள்ளிட்ட 21 உறுப்பினர்களும் வரவேற்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பௌத்த மதகுரு மற்றும் கிறிஸ்தவ மதகுரு ஆகியோர் கலந்து கொண்டதுடன் நகரசபை எல்லைக்குள் அதிகமாக வசிக்கும் இந்து மக்களை பிரதிநித்துவப்படுத்தும் மதகுருவோ, இஸ்லாமிய மதகுருவோ கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் பௌத்த மதகுருவின் ஆசிர்வாத வழிபாட்டுடன் சபை உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதனால் சபையில் இருந்த பலரும் அதிருப்தி அடைந்தனர்.

வரவேற்பு நிகழ்வில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயுரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.‌

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + eighteen =

*