;
Athirady Tamil News

சித்தூர் அருகே இடி தாக்கி 51 ஆடுகள் பலி..!!

0

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சித்திரெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் விவசாயி. இவர் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். சித்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் முனிரத்தினம் சித்தி ரெட்டி பள்ளி கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் ஆடுகளை மேய்க்க ஓட்டி சென்றார்.

நேற்று மாலை வனப்பகுதியில் திடீரென இடி, மின்னலுடன்பலத்த மழை பெய்தது. அப்போது மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை இடிதாக்கியது.

இதில் 51 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்ணப்பா மற்றும் வருவாய் துறையினர் இறந்த ஆடுகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + one =

*