;
Athirady Tamil News

வவுனியா நகரசபையின் கன்னி அமர்வு அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் சிறப்பாக இடம்பெற்றது..!! (படங்கள்)

0

நகரசபையின் தவிசாளர் இ. கௌதமன் தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில் அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த 21 உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது நிகழ்ச்சி நிரலில் சில விடய்ஙகள் உள்ளடக்கப்படவில்லை என சில அங்கத்தர்வாகளால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் குறித்த காலப்பகுதிக்கு முன்னர் சபை அமர்வுகளுக்கான அழைப்புகளோ நிகழ்ச்சி நிரல்களோ வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்புகள் மற்றும் அழைப்பிதழ்கள் தொடர்பாக செயலாளரே மேற்கொண்டமையினால் செயலளாரின் விளக்கம் கோரப்பட்டிருந்தது.

,தன்போது செயலாளர் சில தவறுகள் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்டதுடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான நிலை ஏற்படாது என தெரிவித்தார்.

அதற்குமப்பால் உறுப்பினர்கள் சிலரால் தவிசாளர் இவ்விடயங்கள் தொடர்பாக கரிசனை கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் சபையினால் மக்களுக்கு செய்யப்படும் அனைத்து நல்ல விடயங்களுக்கும் கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குவோம் என அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர்.

இந் நிலையில் தமிழ் தேசிக்கூட்டமைப்பின் உறுப்பினர்களும் நகரசபையின் மக்கள் பணிக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்குவோம் என தெரிவித்ததுடன் விரோதமான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தவும் பின்னிற்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

அத்துடன் மக்கள் அணையை அதிகளவில் பெற்று சபையிக்கு வந்த தாம் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக சபை முடிவுகள் அமையுமானால் அதனை துணிந்து எதிர்ப்போம் எனவும் சபை அமர்வில் வெளிப்படுத்தியிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*