;
Athirady Tamil News

பெண்ணொருவரிற்கு சகோதரனால் நடந்த கொடூரம்..!!

0

மொனராகலை – பிபில – மில்ஹேவ பிரதேசத்தில் சகோதரர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் சகோதரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காணி பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து நேற்று இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மண்வெட்டியால் தாக்கி இந்த கொலை இடம்பெற்றுள்ளதோடு, சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − five =

*