;
Athirady Tamil News

மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி – மம்தாவுக்கு மு.க ஸ்டாலின் ஆதரவு..!!

0

பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சந்தித்த சந்திரசேகர் ராவ் இது தொடர்பாக தீவிரமாக விவாதித்தார்.

திமுக, பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி உள்ளிட்ட பல மாநில கட்சிகளுக்கு சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “வலுவாக கூட்டாட்சி மற்றும் மாநில கட்சிகளின் ஒற்றுமைக்கு திமுக எப்போதுமே துணை நிற்கும். பா.ஜ.க வை எதிர்த்து நிற்க பல்வேறு கட்சிகளை ஒன்றினைக்கும் மம்தா பாணர்ஜி அவர்களின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + fourteen =

*