;
Athirady Tamil News

சிஎஸ்கே பவுலிங் மீண்டும் எழுச்சி.. 15 ஓவர்களில் பெங்களூரு 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள்..!!

0

பெங்களூருவில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டாஸை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோஹ்லி 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டிகாக், டிவில்லியர்ஸ் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நாளுக்கு நாள் பரபரப்பையும் ஆர்வத்தையும் எகிற வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த சீசனில் நேற்று நடந்த 23வது ஆட்டத்தில் ஹைதராபாத், மும்பை அணிகள் மோதின. அதில் 118 ரன்களுக்கு ஹைதராபாத் சுருண்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்த நிலையில் மும்பை 87 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஐபிஎல் போட்டிகளில் பரபரப்பு கூடிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் இன்று நடக்கும் சீசனின் 24வது ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

ஹார்ட் அட்டாக் ஸ்பெஷலிஸ்ட் இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் துவங்கி இதுவரை தான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணி, ரசிகர்களுக்கும் எதிரணிகளுக்கும் ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும் வகையில் விளையாடியுள்ளது. இதுவரை 5 ஆட்டங்களில் நான்கில் வென்று, புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பெங்களூருவுக்கு ஹார்ட் பிரேக் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக மிகச் சிறந்த வெற்றி கேப்டனாக வலம் வரும் விராட் கோஹ்லி பெங்களூரு அணியின் கேப்டனாக உள்ளார்.

இந்த அணி 5 ஆட்டங்களில் 2ல் வெற்றி, 3ல் தோல்வி அடைந்துள்ளது. இதுவரை பெங்களூரு கோப்பையை வென்றதில்லை என்ற அவப்பெயரை துடைப்பதற்கு கோஹ்லி உறுதி பூண்டுள்ளார். ஆனால், இதுவரை நடந்த ஆட்டங்களில் அந்த அணி சரியாக சோபிக்கவில்லை. 100வது போட்டியில் கோஹ்லி பெங்களூருவில் நடக்கும் ஆட்டம், விராட் கோஹ்லிக்கு, பெங்களூரு அணியின் கேப்டனாக 100வது ஆட்டமாகும்.

ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதில் ரெய்னாவுக்கும் கோஹ்லிக்கும் போட்டி நடந்து வருகிறது. கேப்டனாக 100 ஆட்டத்தில் வெற்றி பெறும் ஆர்வத்துடன் கோஹ்லி உள்ளார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சிஎஸ்கே, பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோஹ்லி 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டிவில்லியர் 68, டிகாக் 53 ரன்கள் எடுத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + four =

*