;
Athirady Tamil News

“கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு ஏன் திரும்ப வாங்கணும்..!” – ‘விஜய் டி.வி. விழா’ பற்றி சுஜா..!!

0

விஜய் டி.வியில் ஒளிபரப்பான, அதிக வரவேற்பைப் பெற்ற சீரியல், ரியாலிட்டி ஷோக்கள், அதில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு ‘விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்’ என்கிற பெயரில் விருது வழங்கி கெளரவித்து வருகிறது விஜய் டிவி. இந்த வருடமும் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் சில நாள்களுக்கு முன்பு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்ற ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு ‘ப்ரைட் ஆஃப் விஜய் டிவி’ என்கிற விருதை அதில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு வழங்கியது விஜய் டி.வி. அந்நிகழ்ச்சியால் மக்களை அதிகம் ஈர்த்த ஓவியா,ரைஸா, ஜூலி, சுஜா, காயத்ரி ரகுராம், சக்தி, கஞ்சா கருப்பு, சினேகன், போன்றவர்கள் விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அப்படிக் கலந்து கொள்ளாத ஒருவரான சுஜாவிடம் ‘நீங்க பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம்தானே அதிகம் பிரபலம் ஆனீங்க… உங்க வீட்டு நிகழ்ச்சிக்கு ஏன் போகலை?” என்கிற கேள்வியோடு போனில் அவரைப் பிடித்தேன்.

” விஜய் டிவியில் இருந்து எனக்கு அழைப்பு வந்துச்சு. ‘நாளைக்கு உங்களுக்கு விருது இருக்கு; வந்துடுங்க’ன்னு சொன்னாங்க. நான் வெளியூர் போகுறதுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன்’னு சொன்னேன்.

‘அப்படியா டிக்கெட்டை கேன்சல் பண்ணிட்டு வாங்க’ன்னு சொன்னாங்க. ‘இல்லங்க எனக்குப் பதிலா என் அம்மாவை அவார்டு வாங்க அனுப்பி வைக்கட்டும்மானு கேட்டதுக்கு, இல்லங்க அதுல கலந்துக்க வர்ற சக போட்டியாளர்கள்கிட்ட உங்க அவார்டை கொடுத்திடுறோம்னு சொன்னாங்க. சரினு வைச்சுட்டேன்.

விஜய் டி.வி பண்ற டி.ஆர்.பி விஷயங்களுக்காக நான் ஏன் மரியாதையை விட்டுக் கொடுக்கணும். அவார்டு நடத்தப் போறாங்கன்னு அவங்களுக்கு முன்னாடியே தெரியும்தானே..! கடைசி நேரத்துல கூப்டா என்ன அர்த்தம்… நாங்க என்ன விஜய் டிவி ஊழியர்களா..? அவங்க இஷ்டப்பட்ட நேரத்துல போய் உடனே நிக்கிறதுக்கு…

இதுக்கிடையில ‘பிக்பாஸ் கொண்டாட்டம்’னு ஒரு ரியாலிட்டி ஷோ பண்ணாங்க. பிக்பாஸ் நிகழ்ச்சி டி.ஆர்.பியில் நல்ல ரீச் கொடுத்துச்சுன்னு எங்க எல்லாருக்கும் அவார்டு கொடுக்கிறோம்னு சொல்லி கூப்பிட்டாங்க. ஸ்டேஜ்ல ஏறின எல்லாருக்கும் தனித்தனி அவார்டு கொடுத்தாங்க.

ஆனா, எனக்கும் கணேஷூக்கும் சேர்த்து ஒரே ஒரு அவார்டுதான் கொடுத்தாங்க. ‘இந்த அவார்டை நீங்களே கொண்டு போங்க சுஜா’ன்னு கணேஷ் பெருந்தன்மையா சொன்னார். சரின்னு அவர்கிட்ட வாங்கிட்டு ஸ்டேஜ்ல இருந்து கீழேதான் இறங்குனேன்.

விஜய் டிவி ஸ்டாஃப் ஒரு பொண்ணு வேகமா வந்து, ‘மேம் இந்த அவார்டு அடுத்தவங்களுக்கு கொடுக்கணும் ; கொஞ்சம் தர்றீங்களானு கேட்டாங்க.’ எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.

ஒரு அவார்டு வாங்கக்கூடக் காசு இல்லாமதான் இருக்காங்களா விஜய் டிவிகாரங்க. ஏன், கலந்துகிட்டப் போட்டியாளர்களுக்கு தனித்தனி அவார்டு கொடுக்கக்கூட அவங்களால முடியாதா… என்னோட அவார்டை வாங்கி இன்னொருத்தருக்குக் கொடுக்கிறது அசிங்கம்னுகூட அவங்களுக்குத் தெரியலை.

இப்போ கூட ‘பிரைட் ஆஃப் விஜய் டிவி’ன்னு பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒட்டுமொத்தமா ஒரு அவார்டு கொடுத்திருக்காங்க. கலந்துகிட்ட அத்தனை பேருக்கும் அவார்டு கொடுத்தாதான் என்னவாம்… இந்நேரம் அந்த ஒரு அவார்டை யார் எடுத்துட்டு போயிருப்பாங்க.. யோசிச்சு பாருங்க..! விஜய் டிவிகாரங்கதான் திரும்ப வாங்கிருப்பாங்க.

அவார்டுங்குறது ஒருத்தங்களுடைய உழைப்புக்கு கொடுக்கப்படுகிற அங்கீகாரம். அதை விளம்பரத்துக்காக கொடுக்குறது ரொம்ப தவறான விஷயம்.

பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் என் அப்பா என் கையால ஒரு வாய் சாப்பிடணும்னு ஆசையா இருக்குன்னு சொல்லி நான் ஃபீல் பண்ணப்போ, கமல் சார் ஒரு மாசம் பாரும்மா.. உன் அப்பா வரலேன்னா உன் அப்பாவா நான் வந்து உன் கையால சாப்டுறேன்’னு சொன்னார்.

ஆனா, இன்னைக்கு வரைக்கும் வரல. நானும் பல முறை சேனலில் பேசிட்டேன். இதுக்கான முயற்சியை இப்போவரைக்கும் அவங்க எடுக்கல.

நான் கமல் சாரை பர்சனலா அப்ரோச் பண்ண முடியாது. ஏன்னா, ஒரு ரியாலிட்டி ஷோ மூலமா அவர் சொன்னதுனால அந்த ரியாலிட்டி ஷோ மூலமா தான் என் ஆசையை சொல்ல முடியும்.

அந்த சேனல், கொடுத்த வாக்கை காப்பாற்றணும். காப்பாற்ற முடியாதுன்னா அதைப் பேசக்கூடாது. நிறைய பேர் சோஷியல் மீடியாவில் கமல் சார் உங்க வீட்டுக்கு வந்தாரான்னு கேட்குறாங்க..! நான் என்ன பதில் சொல்றது..?! நிகழ்ச்சியை முழுசா நம்பி பார்க்குற மக்களை ஏமாற்றக்கூடாது.

பிக்பாஸ் நிகழ்ச்சி எங்க எல்லோருக்கும் போதுமான புகழை கொடுத்துருக்கு. ஆனா, யாருக்கும் சக்ஸஸை கொடுக்கலை. விஜய் டிவிகாரங்களோட மோசமான நடவடிக்கைனாலதான் அவங்க கூப்பிட்ட அவார்டு நிகழ்ச்சிக்கு எனக்கு போகப்பிடிக்கலை. அதான் கலந்துகிடலை” என்றார்.

சுஜா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு விஜய் டிவி தரப்பின் விளக்கம் அறியும் முயற்சிக்குப் பலன் கிட்டவில்லை. அவர்கள் விளக்கமளிக்க முன் வந்தால், பரீசிலனைக்குப் பின் அதைப் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*