;
Athirady Tamil News

பூநகரி முழங்காவில் பகுதி பாடசாலைகளுக்கு வடக்கு கல்வி அமைச்சர் கள விஜயம்..!! (படங்கள்)

0

பூநகரி முழங்காவில் பகுதி பாடசாலைகளுக்கு வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் கள ஆய்வுப்பணியினை மேற்கொள்வதற்கு 23.04.2018 அன்று பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இந்த கள ஆய்வுப்பணி மூலம் முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு தேவையான காணி தொடர்பான வியங்கள் ஆய்வுக்கு உற்படுத்தப்பட்டன.

இதன் போது காணி ஆணையாளரும் பூநகரி பிரதேச செயலகத்தின் காணிப்பகுதிக்கு பொறுப்பாக இருக்கும் காணி அதிகாரிகளும் அழைக்கப்பட்டு காணிப்பிரச்சினை தொடர்பான விளக்கங்கள் கோரப்பட்துடன் பாடசாலையின் எதிர்கால வளர்ச்சி தொடர்பில் எதிர்காலத்தில் நீச்சல் தடாகம்,உள்ளக விளையாட்டரங்கு,தொழிநுற்ப ஆய்வுகூடம் போன்ற வசதிகளை ஏற்படுத்தும் வகையிலும் பாடசாலைக்கு காணிகள் அவசியம் வேண்டும் என்ற விடயம் கருத்தில் கொள்ளப்பட்டு அமைச்சர் அவர்களினால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 30 இற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தங்குவதற்கும் மேலதிக ஆசிரியர்கள் தங்கும் விடுதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை போர் காரணமாக இரணை தீவில் இருந்து இடம்பெயர்ந்து இரணைமாதா நகரில் இயங்கிக்கொண்டிருக்கும் இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் வித்தியாலயத்திலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த பாடசாலையில் வன விலங்குகளால் பாடசாலை கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதும் அதனால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பாதிப்படைவதையும் அவதானிக்கப்பட்டு உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறும் அமைச்சர் அவர்களினால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து அமைச்சர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலைக்கும் கள ஆய்வுப்பணிக்கு சென்றிருந்தனர்.

இதன் போது குறித்த பாடசாலையின் தற்போதைய தேவைகள் குறித்து பாடசாலை சமூகத்துடன் அமைச்சர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கலந்துரையாடல்களை மேற்கொண்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய விடயங்களை உடனடியாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இத்துடன் குறித்த பாடசாலையின் பெண் ஆசிரியர்கள் தங்குவதற்கான ஆசிரியர் விடுதி பற்றாக்குறையும் கண்டறியப்பட்டு முழங்காவில் பகுதியில் உள்ள வட மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு சொந்தமான விடுதிகள் பெறப்பட்டு குறித்த பாடசாலை ஆசிரியர்களுக்கான விடுதி ஒழுக்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த கள ஆய்வுப்பணியில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்,கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர்,பூநகரிகோட்டக்கல்வி அதிகாரி, வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள்,பூநகரி பிரதேசசெயலக காணிப்பகுதி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*