;
Athirady Tamil News

பதக்கங்கள் பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு..!!

0

2018 இற்கான பொதுநலவாய விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை வீர வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

திறமைகளை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகளுக்குப் பாராட்டு தெரிவித்து அவர்களுக்கு சன்மானம் வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வீர வீராங்களைகளுக்கு சன்மானங்களும், பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கை வீர வீராங்கனைகள் ஒரு வெள்ளிப்பதக்கம் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 6 பதக்கங்களை இலங்கைக்காகப் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*