;
Athirady Tamil News

இறுக்கமான உடையில் பெண்கள் உடற்பயிற்சி நிலையம் வெளியிட்ட வீடியோ: சவுதி அரசு அதிரடி உத்தரவு..!! (வீடியோ)

0

சவுதி அரேபியாவில் பெண்கள் உடற்பயிற்சி நிலையம் ஒன்று, விளம்பரப்படுத்தும் நோக்கில் இறுக்கமான உடையணிந்து பெண் தொடர்பான வீடியோவை வெளியிட்டதால், அந்த உடற்பயிற்சி நிலையத்தை மூடுவதற்கு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகள் சில சமீபகாலமாக தளர்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பெண்கள் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அதில் ஆடை விதிமுறைகள் எப்போதும் போல் கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சவுதியின் ரியாத்தில் உள்ள பெண்கள் உடற்பயிற்சி நிலையம் ஒன்று தங்கள் நிலையத்தை விளம்பரப் படுத்தும் நோக்கில் சமூகவலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளது.

அதில் வரும் பெண் ஒருவர் இறுக்கமான உடை அணிந்து, தலை முடியையும் மூடாமல் வந்து உடற்பயிற்சி நிலையத்தில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் சென்றும் விளக்குகிறார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதுமட்டுமின்றி பெண்களுக்கு என்று ஆடைக்கட்டுப்பாடு உள்ளது. ஆனால் குறித்த பயிற்சி நிலையமோ கட்டுப்பாடுகளை மீறியுள்ளதால், அந்த பயிற்சி நிலையத்திற்கான உரிமத்தை உடனடியாக ரத்து செய்ததுடன், அதை மூடுவதற்கும் சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி குறித்த பயிற்சி நிலையம் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + six =

*