;
Athirady Tamil News

இவர் பிரித்தானிய மகாராணி தானா? புகைப்படம் எடுத்தவர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி..!!

0

லண்டனில் உள்ள St Mary’s மருத்துவமனை வெளியே போலியாக உலா வந்த பிரித்தானிய மகாராணி பார்த்து பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இளவரசி கேட் பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அங்கு அதிகமான புகைப்படக்கலைஞர்கள் குவிந்தனர்.

இதற்கிடையில் ஆண் குழந்தை பிறந்துவிட்டது என அறிவிக்கப்பட்டவுடன், குட்டி இளவரசரை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு புகைப்படக்கலைஞர்கள் மற்றும் மருத்துவமனையில் வெளியே கூடியிருந்த மக்கள் மத்தியில் அதிகரித்தது.

அப்போது, கருப்பு நிற காரில் பிங்க் நிற ஆடை மற்றும் கழுத்தில் முத்துக்களுடன் கூடிய நகையை அணிந்துகொண்டு பிரித்தானிய மகாராணி உலா வந்தார்.

இவரைப்பார்த்ததும், புகைப்படக்கலைஞர்கள் வேகமாக ஓடிச்சென்று புகைப்படம் எடுத்தனர். அதன் பின்னர் அது போலியான மகாராணி என்று அறிந்து அதிர்ச்சியடைந்தனர். விளையாட்டுத்தனமாக யாரோ மெழுகால் செய்யப்பட்ட சிலையை காரில் கொண்டு அனைவரையும் ஏமாற்றியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 − three =

*