;
Athirady Tamil News

கிம் ஜாங் உன்னை கவர்ந்த சுவிஸ் உணவு! தென் கொரியாவின் திட்டம் இதுதான்..!!

0

வரும் வெள்ளியன்று திட்டமிடப்பட்டுள்ள கொரிய அதிபர்கள் சந்திப்பில், கிம் ஜாங் உன் பள்ளிப்பருவத்தில் உண்ட சுவிஸ் உணவுகளை விருந்தளித்து அவரது பள்ளிப்பருவத்தை நினைவுபடுத்த தென் கொரியா திட்டமிட்டுள்ளது.

கிம் சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்றதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்துள்ள நிலையில், அவர் விரும்பி உண்ணும் சுவிட்சர்லாந்து உணவான சுவிஸ் உருளைக்கிழங்கு உணவு ஒன்றை அவருக்கு அளிக்கப்பட உள்ள விருந்தில் பரிமாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2007ஆம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக சந்திக்க உள்ள நிலையில் இரு நாடுகளின் உணவு வகைகளும் விருந்தில் இடம்பெற உள்ளதாக விருந்தளிக்கும் நாடான தென் கொரியா தெரிவித்துள்ளது

தென் கொரிய அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க வட கொரியாவின் சிறப்பு உணவான குளிர்ந்த நூடுல்ஸ் வட கொரிய செஃப் ஒருவரால் தென் கொரியாவிலேயே சமைக்கப்பட உள்ளது.

ரோஸ்ட்டி எனப்படும் சுவிஸ் ஃபிரைட் பொட்டட்டோ உணவு கிம்முக்கு பரிமாறப்பட உள்ளது.

வடக்கில் தோன்றி பின் தெற்கில் பிரபலமான Munbaeju என்னும் மதுபானம் ஒன்றும் விருந்தில் பரிமாறப்பட உள்ளது.

தென் கொரிய அதிபரை கௌரவிக்கும் வகையில் அவரது சொந்த ஊரான தென் கொரிய துறைமுக நகரமான Busanஇல் அதிகம் விரும்பி உண்ணப்படும் baked John Dory என்னும் பிரபல மீன் உணவும் பரிமாறப்பட உள்ளது

இந்த சந்திப்பு வட கொரியாவின் அணு ஆயுத திட்டம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தும் முயற்சியின் ஒரு அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியா, அதன் சிறப்பு உணவுகளைக் கொண்டு விருந்தளித்து தனது அரசியல் கருத்துக்களை முன் வைப்பதில் புகழ்பெற்ற நாடாகும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + twenty =

*