;
Athirady Tamil News

H-4 விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய பிரச்சினை: 70,000 பேர் பாதிக்கப்படலாம்..!!

0

H-1B விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் பணி புரிவதற்கு அனுமதிக்கும் வகையில் முந்தைய அமெரிக்க அதிபர் ஒபாமாவால் அறிமுகப்படுத்தப்பட்ட H-4 விசா முறையை ரத்து செய்ய தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மெரிக்காவில் வாழும் பிற நாட்டவர்களை முக்கியமாக இந்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

100,000க்கும் அதிகமான H-4 விசா வைத்திருப்பவர்கள் இதுவரை ஒபாமாவால் அறிமுகப்படுத்தப்பட்ட H-4 விசா முறையால் நன்மை பெற்று வந்தார்கள்.

தற்போது டிரம்பின் முடிவால் 70,000 பேர் வரை பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.2015ஆம் ஆண்டு ஒபாமா அறிமுகப்படுத்திய விதி ஒன்று H-1B விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் பணி புரிவதற்கு அனுமதிக்கிறது.

டிரம்ப் நிர்வாகம் இந்த முறையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த கோடைக்கால இறுதிக்குள் வரும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்தல் துறையின் இயக்குநர் பிரான்சிஸ் சிஸ்னா தெரிவித்தார்.

ஜூன் 2017 வரை 71,287 பேருக்கு பணி புரிவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் 94 சதவிகிதம்பேர் பெண்கள், அவர்களில் 93 சதவிகிதத்தினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 4 சதவிகிதத்தினர் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*