;
Athirady Tamil News

சுப்ரீம் கோர்ட்டு தொடர்பான பிரச்சினைகளை அனைத்து நீதிபதிகளையும் கூட்டி விவாதிக்க வேண்டும்: நீதிபதிகள் கடிதம்..!!

0

நீதிபதிகள் நியமனம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு ‘கொலிஜியம்’ செய்யும் சிபாரிசுகளை நிராகரிப்பதாக மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சிலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக, தலைமை நீதிபதியையும் சில மூத்த நீதிபதிகள் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மூத்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், எம்.பி.லோகுர் ஆகியோர் ஒரு கடிதம் எழுதி உள்ளனர். அதில், சுப்ரீம் கோர்ட்டு தொடர்பான மேற்கண்ட பிரச்சினைகள் பற்றியும், சுப்ரீம் கோர்ட்டின் எதிர்காலம் பற்றியும் விவாதிக்க சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை கூட்டுமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை, தலைமை நீதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மான நோட்டீசை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நிராகரித்தவுடன், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனைவரும் கூடிப் பேசினர். அப்போது, கடிதத்தில் இடம்பெற்றுள்ள அதே பிரச்சினைகள் பற்றி விவாதித்துள்ளனர்.

பொதுவாக, நீதித்துறை தொடர்பான பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை வரும்போது, அனைத்து நீதிபதிகளின் கூட்டத்தை தலைமை நீதிபதி கூட்டுவது மரபாகும்.

நீதிபதி செல்லமேஸ்வர்

நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு பற்றி விவாதிக்க அனைத்து நீதிபதிகளின் கூட்டத்தை கூட்டுமாறு தலைமை நீதிபதிக்கு நீதிபதி செல்லமேஸ்வர் கடந்த மாதம் 21-ந் தேதி கடிதம் எழுதினார்.

அதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு தொடர்பான பிரச்சினைகளை பற்றி விவாதிக்க 7 மூத்த நீதிபதிகள் அடங்கிய அமர்வை அமைக்குமாறு நீதிபதி குரியன் ஜோசப், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில்தான், நீதிபதிகள் ரஞ்சன் கோகாயும், எம்.பி.லோகுரும் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 12 =

*