;
Athirady Tamil News

ஜிசாட்-11 நவீன செயற்கைகோள் விண்ணில் ஏவுவது ஒத்திவைப்பு – இஸ்ரோ தகவல்..!!

0

இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ) சார்பில் தகவல் தொடர்பு செயற்கைகோள் ஜிசாட்-6ஏ விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டு ஒரு வாரத்திற்குப்பின் தொடர்பை இழந்தது. இந்த நிலையில் இஸ்ரோ சார்பில் தகவல் தொடர்புக்கான ஜிசாட்-11 நவீன செயற்கைகோள் தயாரிக்கப்பட்டது.

இது அதிக எடை கொண்டது. அந்த செயற்கைகோளை அடுத்த மாதம்(மே) பிரான்சு நாட்டின் கயானாவில் இருந்து விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த செயற்கைகோளை விண்ணில் ஏவுவதை இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தொழில்நுட்ப ரீதியிலான சோதனைகள் நடத்த வேண்டி இருப்பதால் அந்த செயற்கைகோளை விண்ணில் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அந்த செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஐரோப்பிய செயற்கைகோள் ராக்கெட் ஏரியன்-5 மே மாதம் 25-ந் தேதி விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அந்த ராக்கெட் ஏவுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 7 =

*