;
Athirady Tamil News

பஞ்சாயத்து தேர்தல் வன்முறை சம்பவங்கள் வருத்தம் அளிக்கின்றன – முன்னாள் சபாநாயகர்..!!

0

மேற்கு வங்காளம் மாநிலத்தில் வரும் மே மாதம் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வது முடிவடைந்து விட்டது. ஆளும் திரிணாமுல் கட்சியினர் எதிர்க்கட்சிகளை வேட்புமனு தாக்கல் செய்ய விடுவதில்லை எனவும், வேட்பு மனுக்களை அதிகாரிகள் வழங்குவது இல்லை எனவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அங்கு அடிக்கடி வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தேர்தல் ஆணையத்தை அணுகி கோரிக்கை விடும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர்

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது என முன்னாள் சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தினமும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தேர்தலில் போட்டியிட வரும் வேட்பாளர்கள் தாக்கப்படுகின்றனர். தடுத்து நிறுத்தப்படுகின்றனர். சில சமயங்களில் கொல்லப்படுகின்றனர். இதுபோன்ற வன்முறை சம்பவங்களுக்கு எதிராக மக்கள் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும்.

இதற்கு எதிர்க்கட்சியினர் தான் காரணம் என ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் போலீசார் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? எதிர்க்கட்சியினர் வன்முறையில் ஈடுபடுவதை கண்டு அவர்கள் வெறுமனே நிற்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் தனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது எனவும் அவ்ர் தெரிவித்துள்ளார். #SomnathChattarjee, #TamilNews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + two =

*