;
Athirady Tamil News

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகிய வவுனியா வர்த்தகர்களுக்கு கௌரவிப்பு..!! (படங்கள்)

0

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகிய வவுனியா வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா வர்த்தக சங்க செயலாளர் சிறிஸ்கந்தராஜா அவர்களின் தலைமையில் வவுனியா, ஓவியா விருந்தினர் விடுதியில் நேற்று (25) இரவு இந் நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா வர்த்தக சங்கப் பிரதிநிதிகளாக இருந்து வவுனியா நகரசபை தலைவராக தெரிவாகியுள்ள இ.கௌதமன், நகரசபையின் உப தலைவராக தெரிவாகியுள்ள சு.குமாரசாமி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவராக தெரிவாகியுள்ள து.நடராஜசிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உபதலைவராக தெரிவாகியுள்ள வே.மகேந்திரன், வவுனியா நகரசபை உறுப்பினராக தெரிவாகியுள்ள ரி.கே.இராஜலிங்கம் ஆகியோரே இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

வர்த்தக சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களால் இக் கௌரவிப்பு வழங்கப்பட்டதுடன், குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உப தலைவர்களின் செயற்பாடுகளுக்கு வர்த்தக சங்கம் தனது ஆதரவையும் வழங்குவதாகவும் இதன்போது வர்த்தக சங்கத்தினர் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 13 =

*