;
Athirady Tamil News

கண்ணா.. ஒரு முறைதான் தவறும்.. சின்னச்சாமி மைதானத்தை சின்னாபின்னமாக்கிய தோனி..!!

0

நேற்று சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் நடந்த த்ரில்லிங் போட்டியில் சென்னை அணி அதிரடியாக வெற்றி பெற்று இருக்கிறது. சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் தோனி ஆடியது பெரிய ‘சாமி’ ஆட்டம். டெஸ்ட் பிளேயர் பாஸ் அவரு, வயசாகிடுச்சு, பேசாமா தோனியை ரிட்டையர் ஆக சொல்லுங்க என்று நூற்றுக்கணக்கில் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது. எல்லாவற்றையும் இந்த ஐபிஎல் தொடர் மூலம் உடைத்துக் கொண்டு இருக்கிறார் தல தோனி. மஞ்சள் கொடி இல்லாத மைதானம், எங்கும் ஆர்சிபி ஆர்சிபி என்ற கூச்சல், மிகவும் அதிகபட்ச இலக்கு, மோசமாக 4 விக்கெட்டை இழந்து தள்ளாடும் சென்னை அணி.

அப்போதுதான், அந்த மோசமான நிலையில்தான் தோனி களத்திற்கு வந்தார். இந்த முறை மெதுவான ஆட்டம் இல்லை தொடக்கமே அதிரடிதான் என்று முதல் பாலே சிக்ஸ் அடித்தார். மோசமான நிலையில் சென்னை முதலில் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டிற்கு 205 ரன்கள் எடுத்தது. டி காக், டி வில்லியர்ஸ், மன்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் என்று கடைசி வரை எல்லா வீரர்களும் பெங்களூரில் ருத்ர தாண்டவம் ஆடினார்கள். சென்னை அணி முதலில் களமிறங்கி ஆரம்பத்திலேயே சொதப்பியது.

வாட்சன் 7 ரன்களிலும், ரெய்னா 11 ரன்களிலும் பெவிலியன் திரும்பினார்கள். வாய்ப்பளிக்கப்பட்ட ஜடேஜாவும் 3 ரன்களில் அவுட்டானார். சென்னை அணி மோசமாக திணற தொடங்கியது. ரட்சகன் அப்போதுதான் சென்னை அணியின் ரட்சகன் வந்தார். இனிமே ரன்ரேட் மோசமாகிடும். தோனி டொக் வைக்கப்போகிறார் என்று தோனி ஹேட்டர்ஸ் போஸ்ட் செய்து கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்களிடம் இருக்கும் போன்களை உடைக்கும் வண்ணம் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். அப்போது தொடங்கிய அதிரடி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்த வரை தொடர்ந்தது. தோனியுடன் பார்ட்னர்ஷிப் தோனியுடன் அம்பதி ராயுடு அமைத்த பார்ட்னர்ஷிப் இந்த ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான பார்ட்னர்ஷிகளில் ஒன்று.

பத்து ஓவர் முடியும் முன் 70 ரன்கள் எடுப்பதற்குள் சென்னை அணி 4 விக்கெட் எடுத்து இருந்தது. 206 ரன்கள் இலக்கு இருக்கும் போது எந்த வீரராக இருந்தாலும் பதட்டம் அடைந்து அவுட்டாவார்கள். ஆனால் தோனியுடன் அசால்ட்டாக ஆடிய அம்பதி ராயுடு நேற்று அடித்த ஷாட்கள் எல்லாம் கிளாஸ். பாகுபலி முதுகில் குத்திய கட்டப்பா போல இந்த முறையும் அவர் ரன் அவுட் ஆனார். அடுத்த முறை அவர் இம்ரான் தாஹிரிடம்தான் ஓடுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்! கிளாஸ் தோனி ஆரம்பத்தில் இருந்து அதிரடியாக ஆடிய தோனி இந்த போட்டியில் கொஞ்சம் வித்தியாசம் காட்டினார். முதலில் மெதுவாக ஆடிவிட்டு கடைசியில் அதிரடி காட்டும் தோனி இந்த முறை தொடக்கத்திலேயே தேவைப்படும் சமயங்களில் சிக்ஸ் அடித்து ரன் ரேட் குறையாதபடி பார்த்துக் கொண்டார்.

முக்கியமாக ஸ்பின் பவுலர்களின் பந்துகளை அலேக்காக தூக்கி பறக்கவிட்டார். 7 சிக்ஸ், ஒரே ஒரு பவுண்டரி என்று அவர் நடத்திய தாண்டவ கூத்து.. 19ஸ், 20ஸ் கிட்களின் கனவு ஆட்டம். ஒருமுறைதான் தவறும் இதேபோல் பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் அதிரடியாக 70 ரன்களுக்கு மேல் அடித்தார். ஆனால் கடைசியில் ஆப் சைடில் யார்க்கர் போட்டு பஞ்சாப் அணி தோனியை கட்டுப்படுத்தியது. அதே டெக்னிக்கை இந்த முறை பெங்களூர் கடைசி ஓவரில் செய்தது. அப்போது தவறிய துண்டு இப்போது தவறவில்லை. கொஞ்சம் கூட யோசிக்காமல் ஆப் சைடில் இறங்கி, டீப்பர் திசையில் சிக்ஸ் பறக்கவிட்டார். கடைசி ஓவரில் அடிக்க வேண்டிய சிக்ஸும், தோனியும், லைலா மஜ்னு ஜோடியை விட சிறந்த ஜோடி என்பதை மீண்டும் நிரூபித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 20 =

*