;
Athirady Tamil News

வவுனியா நகரத்தினை போதை மற்றும் புகையிலை அற்ற பிரதேசமாக மாற்ற கைகோருங்கள் – நகரசபை தலைவர்..!!

0

வவுனியா நகரத்தினை முன்மாதிரியான நகரமாக மாற்றுவதற்கு முதல் கட்டமாக போதை மற்றும் புகையிலை பொருட்கள் அற்ற பிரதேசமாக மாற்ற அனைவரும் கைகோர்த்து உதவ வேண்டும் என வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன் தெரிவித்தார்.

வவுனியா வர்த்தகர் சங்கத்தினால் வவுனியா ஓவியா விருந்தினர் விடுதியில் சங்கத்தின் செயலாளர் கோ. ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்ற நகரசபை மற்றும் பிரதேசசபை தலைவர் உப தலைவர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா நகர்ப்பகுதியில் பொழுதுபோக்கு இடங்கள் இல்லாமையினால் இளைஞர்கள் புகையிலை பொருட்களின் பாவனை மற்றும் மது பாவனைக்கு உள்ளாகி வருகின்றனரா என எண்ணத்தோன்றுகின்றது.
எனவே இளைஞர்களை நல்வழிப்படுத்த வவுனியா நகரத்தினை முன்மாதிரியான நகமாக கொண்டு அனைவரது ஒத்துழைப்புடனும் புகையிலை பாவணை மற்றும் பாவனையை ஒழிக்கும் செயற்றிட்டத்தினை முன்னெடுக்கவேண்டும்.

சட்ட ரீதியாக அதனை தடுப்பது கடினமான விடயம் எனவே நகரின் அபிவிருத்தி இளைஞர்களின் எதிர்காலம் கருத்தி இவ்வாறான பொருட்களை விற்பனை செய்பவர்கள் அதனை குறைத்துக்கொள்ளவோ நிறுத்தவோ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதற்கு எமது பிரதேச மக்கள் ஓரணியாக ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 10 =

*