;
Athirady Tamil News

பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த வாரம்..!!

0

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி விவகாரங்கள் அமைச்சினால் இணைத்துக்கொள்ளப்படவிருக்கும் இருபதாயிரம் பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த வாரம் வழங்கபடவுள்ளதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக குறித்த இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியானது பின்வருமாறு அமைந்துள்ளது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைத்துக் கொள்ளப்படும் அபிவிருத்தி உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளன.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பாகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய 20 ஆயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

இவர்கள் பிரதேச செயலக அலுவலங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். அரசாங்கத்தின் பொருளாதார வலய வேலைத்திட்டத்தை பிரதேசமட்டத்தில் அமுலாக்குவது நியமனம் பெறுவோரின் பிரதான பணியாக அமையும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − 2 =

*