;
Athirady Tamil News

வியானா ஓடையில் கார் ஒன்று விழுந்து விபத்து; அதில் பயணித்தவரை காணவில்லை..!!

0

பதுளை – மஹியங்களை பிரதான வீதியால் பயணம் செய்த மோட்டார் கார் ஒன்று இன்று காலை 05.00 மணியளவில் பாதையைவிட்டு விலகி வியானா ஓடையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக மஹியங்களை பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து ஓடையில் விழுந்த வாகனத்தை மீட்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான மோட்டார் காரை மீட்டடெடுத்த போதிலும் அதில் பயணதித்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரை தகவல் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவரை தேடும் பணிகளில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஹிங்குராங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய திருமணம் முடித்த ஒருவரே இந்த காரை ஓட்டிக் கொண்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + thirteen =

*