;
Athirady Tamil News

இரனைதீவில் மக்களை சந்தித்தனர் சமத்துவம் சமூகநீதிக்கான அமைப்பினர்..!! (படங்கள்)

0

தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க கோரி இரணைமாதா நகரில் 359 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது கோரிக்கைகள் நிறைவேறாத தினால் இரனைதீவில் சென்று கடந்த 23.04.2018 அன்றில் இருந்து தமது போராட்டத்தை தொடர்கின்றனர்

இன்று 362 வது நாளாக இரணைதீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூகநீதிக்கான அமைப்பினர் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் அவர்களுக்கு தேவையான சிறுதொகை உலருணவுப் பொதிகளையும் வழங்கியுள்ளனர்

இதன் போது கருத்துத் தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இதுவரை தம்மை அரச அதிகாரிகள் யாரும் தொடர்பு கொள்ளவில்லை எனவும் தொடர்ந்தும் தாம் ஏமாற்றப்படும் பட்சத்தில் தமது இருப்பிடங்களுக்கு தாங்களாக செல்வதனைத் தவிர வேறு வழிகள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*