;
Athirady Tamil News

முல்லைத்தீவு மருத்துவமனைக்கு ரூ.6.5 மில்லியனில் எக்ஸ்ரே இயந்திரம்..!!

0

முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­து­வ­ம­னைக்கு 6.5 மில்­லி­யன் ரூபா பெறு­ம­தி­யான கதிர்ப்­ப­டம் எடுக்­கும் (எக்ஸ்ரே) புதிய இயந்­தி­ரம் ஒன்று கொள்­வ­னவு செய்­வ­தற்­கான முழு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. ஓரிரு மாதங்­க­ளில் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டும் என்று வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் ஞா. குண­சீ­லன் தெரி­வித்­தார்.

முல்லைத்­தீவு மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் கடந்த மூன்று மாதங்­க­ளாக கதிர்ப்­ப­டம் எடுக்­கும் இயந்­தி­ரம் பழு­த­டைந்­துள்­ளது. இத­னால் நோயா­ளர்­கள் பெரும் சிர­மங்­களை எதிர்­கொண்­டு­வந்­த­னர். பெரிய எலும்பு முறி­வுக்கு உட்­பட்ட நோயா­ளர்­கள் வவு­னியா, யாழ்ப்­பா­ணம் மருத்­துவமனை­க­ளுக்கு அனுப்­பியே அந்த வர்த்தக நிலையம் கதிர்­ப­டம் எடுக்­கப்­பட்­டனர். நோவு­ட­னும் அவர்­கள் வெகு­தூ­ரம் பய­ணம் செய்தே கதிர்ப்­ப­டம் எடுத்­த­னர்.

மாவட்­டத்­துக்­கென குறித்த இயந்­தி­ரத்­தின் தேவை தொடர்­பில் மருத்­து­வ­ம­னைத் தரப்­பி­னரும், நோயா­ளர்­களும் வலி­யு­றுத்­தி­னர்.
எனவே இந்த விட­யம் தொடர்­பாக வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் குண­சீ­ல­னு­டன் தொடர்பு கொண்டு கேட்­ட­போதே அவர் இதனைத் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் கதிர்ப்­ப­டம் எடுக்­கப்­ப­டும் இயந்­தி­ரம் பழு­த­டைந்­தி­ருப்­பது உண்மை. கடந்த ஒரு­வா­ர­மாக அனைத்து நோயா­ளர்­க­ளையும் வெளி மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு அனுப்பி கதிர்ப்­ப­டம் எடுக்­க­வேண்­டிய தேவை இருந்­தது. அதன் பின்­னர் நட­மா­டும் சிறிய இயந்­தி­ரத்­தைக் கொண்டு கதிர்ப்­ப­டம் எடுக்க மருத்­து­வ­ம­னை­யில் ஒழுங்­கு­செய்­யப்­பட்­டுள்­ளது.

இத­னால் தற்­போது நோயா­ளர்­களை வெளி­மா­வட்­டங்­க­ளுக்கு அனுப்புவது நிறுத்­தப்­பட்­டுள்­ளது. மருத்­து­வ­ம­னை­யில் கதிர்ப்­ப­டம் எடுக்­கும் நட­வ­டிக்கை நிரந்­த­ர­மா­னது அல்ல. மருத்­து­வ­மனை நிர்­வா­கத்­தின் மாவட்­டப் பிராந்­திய சேவை­கள் பணிப்­ப­கத்­தால் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­கள் கார­ண­மாக கதிர்ப்­ப­டம் எடுக்­கும் இயந்­தி­ரம் ஒன்று புதி­தாகக் கொள்­வ­னவு செய்­யப்­படுவதற்கு­ரிய கட்­ட­ளை­யை விடு­விக்­கக்­கூ­டிய அள­வி­வுக்கு நில­மை­கள் இருக்­கின்­றன.

6.5 மில்­லி­யன் ரூபா பெறு­ம­தி­யான புதிய இயந்­தி­ரம் ஒன்று கொள்­வ­னவு செய்­வ­தற்­கான முழு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இரண்டு வாரங்­க­ளில் இயந்­தி­ரம் கொள்­வ­னவு செய்­யப்­ப­டும். அதன் பின் னர் நோயா­ளர்­க­ளின் பிரச்­சினை முடி­வுக்­குக் கொண்­டு ­வ­ரப்­ப­டும் – -என்­றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*