;
Athirady Tamil News

பிரித்தானியா ராணுவத்தில் 17,000 வீரர்கள் போருக்கு தகுதியற்றவர்கள்: அதிர்ச்சி தகவல்..!!!

0

பிரித்தானியா ராணுவத்தில் உள்ள வீரர்களில் 17 ஆயிரம் பேர் போர் செய்வதற்கு தகுதியற்றவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த தகவலை பிரபல ஆங்கில பத்திரிக்கையான டெய்லி மிரர் வெளியிட்டுள்ளது.பொதுவாக உலக நாடுகளில் தரைப்படையில், முதல்நிலை போர் வீரர்களை வைத்திருப்பது வழக்கமாக உள்ளது.

இப்படியான போர் வீரர்களை வைத்திருப்பதில் சீனா முன்னணியில் உள்ளது. அந்த நாட்டில் கிட்டத்தட்ட 22 லட்சம் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

ஆனால் பிரித்தானியாவை பொறுத்தவரை 77 ஆயிரம் பேர் மட்டுமே தயார் நிலையில் இருந்தனர்.தற்போது இவர்களில் பல்வேறு காரணங்களால் 17 ஆயிரம் வீரர்கள் போர் செய்வதற்கு தகுதியற்றவர்களாக உள்ளது தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளில் சென்று அடிக்கடி போர் செய்வதால் ஏற்பட்ட மனச்சோர்வே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − ten =

*