;
Athirady Tamil News

பிரித்தானிய இளம்பெண்ணை உயிருடன் கொளுத்திய நபர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

0

பிரித்தானியாவில் அண்டை வீட்டாரின் சண்டையை தீர்க்க சென்ற பெண்மணியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்திய சம்பவத்தில் தொடர்புடைய நபருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Buckinghamshire பகுதியில் குடியிருந்து வருபவர் 27 வயதான Kirsten Ashby.சம்பவத்தன்று இவரது அண்டை வீட்டில் குடியிருக்கும் Raymond Bowen என்பவருக்கும் அவரது காதலிக்கும் சண்டை மூண்டுள்ளது.

பல நாள் பொறுமை காத்த Kirsten சம்பவத்தன்று நேரிடையக சென்று விசாரிக்க முடிவு செய்து, Raymond Bowen-ன் குடியிருப்புக்கு சென்று விசாரித்துள்ளார்.

தங்களது குடும்ப பிரச்னையில் Kirsten தலையிட்டது ரேமண்டுக்கு பிடிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ரேமன்ட், வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து Kirsten மீது ஊற்றி உயிருடன் கொளுத்தியுள்ளார்

இதில் அவருக்கு முகம் சிதைந்தது, கை விரல்கள் அனைத்தையும் இழந்துள்ளார், காதுகள் இரண்டையும் இழந்துள்ளார். மட்டுமின்றி அவரது தலை முடி மொத்தமும் கருகியது.

கடந்த ஆண்டு அனவம்பர் மாதம் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து, தற்போது வரை Kirsten Ashby மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுவரை 80 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் அவரால் பழைய நிலைக்கு திரும்ப முடியாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த முதல் மாதம் முழுவதும் கடும் வலியால் துடித்த அவரை மருத்துவர்கள் கோமா நிலையில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் Raymond Bowen-கு Luton Crown நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 12 =

*