;
Athirady Tamil News

யூதர்களுக்கு ஆதரவு தெரிவிக்க யூத தொப்பி அணிந்து பேரணி: ஜேர்மனியில் நெகிழ்ச்சி சம்பவம்..!!

0

ஜேர்மனியின் பெர்லினில் வெவ்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் இணைந்து யூதர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யூதர்கள் அணியும் தொப்பிகளை அணிந்து பேரணி ஒன்றை நடத்தினர்.

சமீபத்தில் ஜேர்மனியிலுள்ள யூதர்களின் மத்திய கவுன்சிலின் தலைவரான Josef Schuster பொது இடங்களில் யூத தொப்பிகளை அணிவது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த வாரம் யூத தொப்பிகளை அணிந்த இருவர் பெர்லின் தெருக்களில் தாக்கப்பட்டதால் கவனமாக இருக்கும்படி அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்

இதைத் தொடர்ந்தே ஜேர்மன் மக்கள் தங்கள் நாட்டில் வசிக்கும் யூதர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் இப்படி யூத தொப்பிகளை அணிந்து பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டில் மட்டும் 1,468 பேர் யூத விரோத தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு படி மேலாக இந்த தாக்குதல்களில் 1,381 தாக்குதல்களை நிகழ்த்தியது வலது சாரிகளுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

கடந்த வாரம் யூத தொப்பி அணிந்த இளைஞர்கள் இருவரை ஒரு சிரிய அகதி தனது பெல்ட்டால் தாக்கிய விடியோ வெளியாகி அரசியல் வட்டாரங்கள் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து பெர்லினில் மட்டுமின்றி ஜேர்மனியின் பல்வேறு பகுதிகளிலும் யூதர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணிகள் நடத்தப்பட்டன

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*