;
Athirady Tamil News

வேலையற்றவர்களுக்கு அடிப்படை ஊதியம்: பின்லாந்து அரசின் நூதன திட்டம்..!!

0

பின்லாந்தில் வேலையற்றவர்களுக்கு அடிப்படை ஊதியம் வழங்கும் திட்டமானது சோதனை முயற்சியில் வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் முதலாவதாக வேலை வாய்ப்பின்மையால் எழும் பிரச்சனைகளை எதிர்கொள்ள பின்லாந்து அரசு தெரிவு செய்யப்பட்ட 2000 இளைஞர்களுக்கு மாதந்தோறும் தலா 560 யூரோ வழங்க கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் திட்டத்தை அமல் படுத்தியது.

வெற்றிகரமாக செயல்படுத்தி வந்த இந்த திட்டமானது இந்த ஆண்டு துவக்கத்தில் நிறுத்தப்பட்டதாகவும், குறித்த திட்டம் தோல்வியில் முடிந்தது எனவும் கடந்த சில நாட்களாக ஊடகங்கள் செய்து வெளியிட்டு வந்தன.

இந்த நிலையில் குறித்த திட்டம் தொடர்பில் விளக்கமளித்த பின்லாந்து அரசின் சமூக நல அமைச்சக நிர்வாகி Miska Simanainen, சுமார் 20 மில்லியன் யூரோ மதிப்பிலான குறித்த திட்டமானது, பின்லாந்தின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் அரிய திட்டமாகும்.

கடந்த ஓராண்டாக சுமார் 25 முதல் 58 வயது வரையான வேலையற்ற இளைஞர்கள் 2000 பேரை தெரிவு செய்து அவர்களுக்கு மாதந்தோறும் தலா 560 யூரோ வழங்கப்பட்டு வந்தது.

தற்போது குறித்த திட்டத்தின் சாதக பாதகம் தொடர்பில் ஆராய பிரதமர் Juha Sipila உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும் குறித்த திட்டமானது 2018 டிசம்பர் வரை அமுலில் இருக்கும் எனவும் சமூக நல அமைச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி குறித்த திட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்ல 70 மில்லியன் யூரோ அதிகமாக ஒதுக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நபர்கள் வேலையில் இருப்பவர்களா அல்லது நிரந்தர வருவாய் ஈட்டுகின்றனரா என்பது தொடர்பில் எந்த தகவலும் அரசு சார்பில் திரட்டப்படவில்லை.

மேலும் மாதந்தோறும் குறிப்பிட்ட அளவுக்கு ஊக்கத்தொகையை அரசே வழங்குவதால் இளைஞர்களின் வேலை தேடும் ஆர்வம் குறையவும் வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

5.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பின்லாந்தில் பெரும்பாலான மக்கள் குறித்த அடிப்படை ஊதிய திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × four =

*