;
Athirady Tamil News

இலங்கை வர­வுள்ள புனித பௌத்த புரா­தன சின்­னங்கள்..!!

0

வெசாக் பண்­டிகை காலத்தில் பொது­மக்­களின் பார்­வைக்­காக சார­நாத்­தி­லி­ருந்து மிகவும் புனி­த­மான பௌத்த சின்­னங்கள் இலங்கை கொண்டு வரப்­ப­ட­வுள்­ளன.

இது­கு­றித்து கொழும்­பி­லுள்ள இந்­தியத் தூத­ரகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இந்­தி­யா­வி­லி­ருந்து இந்த புனித சின்­னங்கள் இலங்­கைக்கு கொண்டு வரப்­ப­டு­வது இதுவே முதன்முறை என்­ப­துடன் இதற்­காக இந்­திய அர­சாங்­கத்தால் விசேட ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. பொது­மக்கள் இப் புனித சின்­னங்­களை நாளை 28 ஆம் திகதி சனிக்­கி­ழ­மை­யி­லி­ருந்து மே மாதம் 2 ஆம் திகதி வரை கொழும்பு அலரி மாளி­கையில் தரி­சிக்க முடியும்.

சாரநாத் புனித சின்­னங்கள் இலங்­கையில் காட்­சிப்­ப­டுத்துல் இந்­தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடு­க­ளுக்குமிடை­யி­லான ஓர் ஆன்­மீக பந்­தத்தை உரு­வாக்­கு­வ­துடன் இவ்­விரு நாடு­களின் பகிர்ந்து கொள்ளும் பௌத்த பாரம்­ப­ரி­யத்தின் மற்­றுமோர் வெளிப்­ப­டுத்­த­லாக உள்­ளது.

சாரநாத் புனித சின்­னங்கள் இந்­தி­யா­வி­லுள்ள சார­நாத்தில் முல­கன்ட்­கா­குடி பௌத்த விகா­ரையில் பாது­காக்­கப்­பட்டு வரு­கி­றது. புத்த பெருமான் தனது முத­லா­வது போத­னை­களை அங்கே நடத்­தி­ய­தால் சாரநாத் வர­லாற்று ரீதி­யாக முக்­கி­ய­மான இட­மா­க­வுள்­ளது. இந்­தி­யா­வி­லுள்ள மகா­போதி சங்­கத்தின் ஸ்தாபகர் அந­கா­ரிக தர்­ம­பால, சார­நாத்தின் பெரு­மையை மீள் ஸ்தாபிப்­ப­தற்கு முல­கன்ட்­கா­குடி பௌத்த விகா­ரையைக் கட்­டு­வதில் ஒரு முக்­கி­ய­மான பங்­கினை வகித்தார். இந் நிலமும் புனித சின்­னங்­களும் இந்­திய அர­சாங்­கத்­தினால் இந்­திய மகா­போதி சங்­கத்­திற்கு அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்­டன.

விசே­ட­மாக செய்­யப்­பட்ட ஒரு பேழை மிகவும் பவித்­தி­ர­மான மற்றும் உண்­மை­யான இந்த இரு சின்­னங்­க­ளையும் பாது­காக்­கின்­றது. வெள்ளிப் பேழையில் வைக்­கப்­பட்டு விகா­ரையில் பாது­காக்­கப்­படும் முத­லா­வது சின்னம், 1913,-1914 ஆம் ஆண்­டு­களில் சேர் ஜோன் மார்ஷல் என்­ப­வ­ரால் புரா­தன நகர் தக்­சி­லா­விற்கு அருகில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அவை, தர்­ம­ரா­ஜிக்கா தாது­கோ­பு­ரத்­திற்கு அரு­கா­மை­யி­லுள்ள ஒரு சிறிய பௌத்த வழி­பாட்டுத் தலத்தில் ஒரு வெள்ளிப் பேழை­யினுள் 136 வருட திகதிக் குறிப்­பி­டு­த­லுடன் (ஏறத்­தாழ கி.பி. 79 வரு­டங்கள்) கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. அவை ஆசீர்­வ­திக்­கப்­பட்­ட­வற்றின் புனித சின்­னங்­க­ளாகப் பதிவு செய்யப்பட்­டுள்­ளன.

சார­நாத்தில் பாது­காக்­கப்­பட்­டுள்ள இரண்­டா­வது சின்னம் இந்­திய தொல்­பொ­ரு­ளா­ராய்ச்­சி­யா­ள­ரான ஏ.எச்.லோங்ஹேர்ஸ்ட் என்­ப­வரால் 1929 ஆம் ஆண்டு மெட்ராஸ் ஆளு­கைக்­குட்­பட்ட குந்தூர் மாவட்­டத்தில் உள்ள நாகார்­ஜூனக்­கொண்­டா­வி­லுள்ள ஒரு பெரிய தாதுக் கோபு­ரத்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. சின்னம் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட தாதுக் கோபுரம் ஆசீர்­வ­திக்­கப்­பட்­ட­வற்றின் மகா­சைத்யர் அல்­லது வேறு வகையில் பெரிய தாதுக்­கோ­புரம் என விப­ரிக்­கப்­ப­டு­கி­றது.

இந்­திய உயர் ஸ்தானி­க­ரா­லயம், கொழும்பில் புனித பௌத்த சின்­னங்­களைக் காட்சிப்படுத்­து­வ­தற்கு தந்­து­த­வி­ய­மைக்­காக இந்­திய மகா­போதி சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கின்றது. இலங்கையில் புத்த பெருமானின் புனித சின்னங்களைக் காட்சிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இரண்டாவது தடவை மேற்கொண்டுள்ளது. அத்தகைய ஒரு முதலாவது முன்னெடுப்பு 2012 ஆம் ஆண்டு கபிலவஸ்து புனிதசின்னங்களின் காட்சிப்படுத்தலின் போது மேற்கொள்ளப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*