;
Athirady Tamil News

மலையக ரயில் சேவை பாதிப்பு..!!

0

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தபால் ரயிலொன்று தடம் புரண்டமையால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த ரயில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையிலுள்ள பல்லேகம எனும் பகுதியில் வைத்து தடம்புரண்டதாக நாவலப்பிட்டி ரயில் சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது ரயிலின் மூன்று பெட்டிகள் இதன்போது தடம் புரண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரயிலில் பயணித்த பயணிகளையும், தபால் கடிதங்களையும் வேறொரு ரயிலுக்கு மாற்றி அனுப்பியதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

அத்துடன் ரயில் பாதையை சீரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் அதன் பணிகள் நிறைவடைந்ததும் மலையக ரயில் சேவை வழமைக்கு திரும்புமென அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*