;
Athirady Tamil News

வவுனியாவில் மாகாண நிதியொதுக்கீட்டில் உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

வவுனியாவில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு உபகரணங்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கூரைத்தகரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (27.04.2018) வெள்ளிக்கிழமை வவுனியா நகரசபையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களின் 2018ம் ஆண்டுக்கான மாகாண நிதியொதுக்கீட்டில் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது

இதன் போது வவுனியா தேக்கந்தோட்டம் , கற்குழி , வெளிவட்ட வீதி ,கற்குழி , கோவில்புதுக்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 12 பயனாளிகளுக்கு கூரைத்தகரம் , நீர் இணைப்பு வழங்கல் பொருட்கள் , றீப்பை , கூரை சீட் , கூரை ஓடுகள் , சீமேந்து பைகள் போன்ற பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் , வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் , வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் , நகரசபை உறுப்பினர்கள் , வடமாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் அவர்களின் இணைப்பாளர் பா.சிந்துஜன், நகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 2 =

*