;
Athirady Tamil News

வவுனியாவில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமற்றவை என குற்றச்சாட்டு..!! (வீடியோ & படங்கள்)

0

வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் மாதாந்தம் வழங்கப்படும் உலர் உணவு பொருட்கள் பாதுகாப்பு அற்ற முறையில் தரையிலே போடப்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள பலநோக்கு சங்கத்தின் எண்ணை அரைக்கும் ஆலையின் தரையில் பாதுகாப்பற்ற முறையில் உலர் உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டு கர்ப்பிணி பெண்களுக்கு உலர் உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதுடன், வழங்கப்படும் தானியப் பொருட்களில் வண்டுகளும் எறும்புகளும் காணப்படுவதாகவும் பொருட்களை பெற்றுக்கொண்ட மக்கள் விசனம் வெளியிட்டதுடன்

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதாரமான உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*