;
Athirady Tamil News

நியமனம் இல்லையேல் ஒட்டு மொத்தமாக வேலையிலிருந்து விலகுவோம்..!!

0

நியமனம் இல்லையேல் ஒட்டு மொத்தமாக வேலையிலிருந்து விலகுவோம்!! புகையிரதக்கடவை காப்பாளர் சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை!!

நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையானால் அகில இலங்கை ரீதியில் பணியிலிருக்கும் பகையிரதக்கடவை காப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் பணியிலிருந்து விலகப்போவதாக வடக்கு கிழக்கு புகையிரதக்கடவை காப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜே.றொகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
எமது செய்திச்சேவைக்கு கருத்து தெரிவித்த அவர்.

கடந்த ஐந்து ஆண்டு காலத்திற்கு மேலாக பொலிசாரினால் பராமரிக்கப்பட்டு வருகின்ற ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றோம். கடந்த காலத்தில் பலதரப்பட்ட அதிகாரிகளுடனும் திணைக்களங்களுடனும், அமைச்சக்களுடனும் புகையிரதக்கடவை காப்பாளர்களாகிய நாங்கள் எங்கள் பிரச்சனைகளை பல தடவை முன்வைத்த போதும் எங்கள் பிரச்சனை தீர்த்து வைக்கப்படவில்லை இருந்தபோதும் நேரடியாக ஜனாதிபதியை சந்தித்து மகஜர் ஒன்று கையளித்திருந்தோம்.

ஜனாதிபதி எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் நாங்கள் மன வேதனைக்கு உள்ளாகியுள்ளோம். எதிர்வரும் 29-04-2018 முன்னர் எங்களுக்கு பதில் வழுங்குமாறு ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதமர், முதலமைச்சர் ஆகியோருக்கு மகஜர் ஒன்று அனுப்பியுள்ளோம்.

வடக்கு கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் சங்கம் மற்றும் அகில இலங்கை புகையிரதக்கடவை காப்பாளர் சங்கம் ஆகியன இணைந்து எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய எங்கள் ஊழியர்களுடைய நிரந்தர நியமனம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதனை எமக்கு எழுத்து மூலம் அறியத்தராதவிடத்து நாடு தழுவிய ரீதியில் இருக்க கூடிய ஒட்டுமொத்த புகையிரதக்கடவை காப்பாளர்களும் ஒரே நாளில் இச்சேவையை விட்டு விலகுவதாக தீர்மானித்துள்ளோம்.

எங்களுடைய சேவையை இந்த அரசாங்கம் மதிக்க வேண்டும். உயிரை பணயம் வைத்து சேவையாற்றி வரும் எமது ஊழியர்கள் நாள் ஒன்று 250 ரூபாவுக்கு சேவையாற்றி வரும் நிலையில் எமது ஊழியர்களின் வாழ்வாதாரம் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எமது ஊழியர்களின் நிரந்தர நியமனத்தை வழங்க அரசு முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 17 =

*