;
Athirady Tamil News

இராமநாதன் கல்லூரியில் இருமாடி கட்டிட திறப்பு விழா..!! (படங்கள்)

0

இராமநாதன் கல்லூரியில் இருமாடி கட்டிட திறப்பு விழா – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் திறந்து வைத்தார்.

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியின் ஆரம்பப்பிரிவில் அமைக்கப்பட்ட இருமாடிக்கட்டிட திறப்பு விழாவும் சிறுவர் முற்றம் திறப்பு விழாவும் இன்று 27.04.2018 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பாடசாலையில் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டு கட்டிடத்தினை நாடாவெட்டித்திறந்து வைத்தார். வலிகாமம் வலயக்கல்விப்பணிப்பாளர் செ.சந்திரராஜா சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்டார்.

மாகாணசபை உறுப்பினர், வலிகாமம் வலயக்கல்விப்பணிப்பாளர், அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*